நமது ஊரின் நமது பெருமைகள் – திருப்பத்தூர் ( ஸ்ரீ ராஜகாளி அம்மன் )
பண்பாடு மிகுந்த தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் மலைகளின் சுவாசம் கொண்ட சந்தன மாநகரமான திருப்பத்தூர் நகரத்தின் அருகில் அமைதியின் சொர்க்கமாய்த் திகழும் ஜவ்வாது மலையின் தொடர்ச்சியின் கீழ், தென்றல் தாலாட்டும் தென்னைமரத் தோப்புகள் நிறைந்த எழில் கொஞ்சும் அகரம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகாளி அம்மன் 60 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் எழிலுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். உலக சக்தியாய் நிற்கும் மஞ்சள் குங்குமம் நிறைந்த மதிமுகம் கொண்ட ஸ்ரீ ராஜகாளி அம்மன் மலரடியில் வீழ்ந்துருகி நித்திய சுகம் தரப்பணிந்தால் இன்பமெல்லாம் அருளி நலம் தருவாள் நம் அன்னை சக்தி.
தொடர்புக்கு ஸ்ரீ ராஜகாளி அம்மன் சித்தர் பீடம்,
அகரம், திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) 635653
தொலைபேசி: +91 93450 20079, +91 4179 246342
ஈ-மெயில்: contact@rajakaliamman.org
தினந்தோறும் செந்தூரம் வீசும் காலைப் பொழுதினிலிருந்து பூஜைகள ஆரம்பமாகின்றன. காலை 8 மணிக்குக் காலசந்தி பூஜையும், மாலை 5 மணிக்குச் சாயரட்சையும் ஆகம விதிப்படி நடை பெற்றுவருகின்றன.
திருகோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருக்கோவிலை வந்தடைய வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் நகரத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் அகரம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது
For more details: http://rajakaliamman.org
Video Post by Tirupatturcity.com
Follow Instagram @tirupatturcity
Visit Us: http://www.tirupatturcity.com/
youtube: https://youtu.be/kE5rL4Ikl8o
Great content! Super high-quality! Keep it up! 🙂