Eco-Friendly Ganapathy #Tirupattur
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க தற்போது ஒரு முன்னெடுப்பு செய்துள்ளோம். வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மாசில்லா கணபதி என்ற கருப்பொருளை கையில் எடுத்துள்ளோம்.
அதென்ன மாசில்லா கணபதி, தற்போது அதிவிமர்சையாக வைக்கப்படும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் Pop, ரசாயன வேதி கலப்பு வண்ணப்பூச்சுகள், மரக்கட்டைகள், செய்தித்தாள், துணிகள் போன்றவற்றால் செய்யப்படுகிறது. இதனால் திட, திரவ கழிவுகள் அதிகமாக சேருகிறது மேலும் ஏரி, குளம், ஆறுகள் போன்ற நீர்த்தேக்கங்களில் அதை கரைக்கும் போது அந்த நீர்நிலைகளின் தன்மைகெட்டு, அதில் வாழும் பல்லுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்த்து நமது வழிபாடு சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் மாசில்லா கணபதி சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடுவது தான் எங்கள் முன்னெடுப்பு.
மாசில்லா கணபதி முறையில் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட கணபதி சிலை, செம்மண், இயற்கை உரம், ஏதாவது ஒரு வகை காய்கறி விதை, பூந்தொட்டி சேர்த்து வழங்கப்படும். இந்த மாசில்லா கணபதி சிலையை பூஜை முடிந்து மூன்று நாட்கள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றினால் சிலை கரைந்து அதில் வைக்கப்பட்டிருந்த விதை முளைத்து செடி வளரும்.
இதன் மூலம் இயற்கையின் நண்பனாக கணபதி சதுர்த்தியை கொண்டாடுவோம். அனைவரும் சேர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல் அடியை பதிவு செய்வோம் வாருங்கள், ஆதரவு தாருங்கள்.
இங்கனம்…
தி எஃகோ மிஞியன்ஸ்,
Eco Friendly Ganapathy,
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்..
தமிழகம் முழுவதும்,
உங்கள் சிலை முன் பதிவிற்கு தொடர்புக்கு…
+91 9944643043
+91 9965938762
+91 8489776925
+91 7339271247
+91 9842564926
+91 9176771982
+91 9698639787
Good information for our environment 😊
Good Step
Good information